பவானி அருகே எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை: கடன் தொல்லையால் விபரீத முடிவு


பவானி அருகே எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை: கடன் தொல்லையால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 23 May 2018 3:30 AM IST (Updated: 23 May 2018 3:17 AM IST)
t-max-icont-min-icon

பவானி அருகே, கடன் தொல்லையால் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

பவானி, 

பவானி அருகே, கடன் தொல்லையால் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பவானி அருகே உள்ள செங்காடு கோட்டை விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 44). இவருடைய மனைவி உஷாராணி (37). இவர்களுக்கு அருண்குமார் என்ற மகனும், ரம்யா என்ற மகளும் உள்ளனர். செல்வராஜ் பவானி அருகே உள்ள மைலம்பாடி பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வந்தார். அப்போது கடையை விரிவுபடுத்துவதற்காக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் செல்வராஜ் இருந்து உள்ளார். மேலும் கடன் கொடுத்தவர்கள் அதனை திரும்ப கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன் விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.

இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் மாலை செல்வராஜ் இறந்தார். இதுகுறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story