மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டர் மோதி சிறுவன் சாவு
மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டர் மோதி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
பொன்னேரி,
பொன்னேரியை அடுத்த வீரங்கிவேடு கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் கோகுல் (வயது 3½). நேற்று அதிகாலை பாபுவின் தம்பி சண்முகம் தனது மோட்டார் சைக்கிளில் கோகுலை ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள வயல்வெளிக்கு சென்றார். அப்போது எதிரே மணல் கடத்தி வந்த டிராக்டர் திடீரென இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே கோகுல் பரிதாபமாக இறந்தான். சண்முகம் படுகாயம் அடைந்தார். விபத்து நடந்ததும் டிராக்டரை நிறுத்தி விட்டு அதில் இருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். படுகாயம் அடைந்த சண்முகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பெரும்பேடு ஏரியில் மர்ம நபர்கள் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story