நிபா வைரஸ் காய்ச்சல் பீதி: மரத்தில் கூட்டமாக இருக்கும் பழந்தின்னி வவ்வால்களை அகற்ற கோரிக்கை

நிபா வைரஸ் காய்ச்சல் பீதியால் மரத்தில் கூட்டமாக இருக்கும் பழந்தின்னி வவ்வால்களை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை,
கேரள மாநிலத்தில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 10-க்கும் மேற்பட்டவர்கள் இறந்து உள்ளனர். மேலும் ஏராளமானோர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள் இடையே கடுமையான அச்சம் நிலவி வருகிறது.
இந்த வைரஸ் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுவது தெரிய வந்து உள்ளது. எனவே வவ்வால்கள் கடித்திருக்கலாம் என கருதப்படும் பழங்கள், காய்கள் போன்றவற்றை உண்பதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். புதுக்கோட்டையில் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தின் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் கூட்டமாக பழந்தின்னி வவ்வால்கள் காணப்படுகிறது.
இந்தநிலையில் வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவதால், புதுக்கோட்டை நகரில் உள்ள மக்கள் அந்த வழியாக செல்வதை தவிர்த்து வருகின்றனர். எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் பழந்தின்னி வவ்வால்களை ஆய்வுக்கு உட்படுத்தி, நிபா வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டும்.
தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சலின் தாக்கம் இல்லை என்றாலும், வெளிநாட்டு பறவை இனங்கள் தமிழகத்திற்கு வருவதை போல, கேரளா மாநிலத்தில் இருந்து பழந்தின்னி வவ்வால்கள் தமிழகத்திற்கு வந்து, இங்கு இருக்கும் வவ்வால்களோடு கலப்பதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் அவற்றை அகற்றி மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Tags :
Next Story