குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்கம்


குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்கம்
x
தினத்தந்தி 24 May 2018 4:15 AM IST (Updated: 24 May 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது.

குடியாத்தம், 

குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு தாசில்தார் பி.எஸ்.கோபி தலைமை தாங்கினார். துயர்துடைப்பு தாசில்தார் சுமதி, வேளாண் உதவி இயக்குனர் விஸ்வநாதன், வட்ட துணை நிலஆய்வாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட வழங்கல் அலுவலர் கலைவாணி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக உதவி கலெக்டர் செல்வராஜ் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். ஜமாபந்தியில் பொதுமக்களின் வசதிக்காக கல்லப்பாடியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் ஜமாபந்தி மேலாளர் நெடுமாறன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரமேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜீவரத்தினம், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில், ரமேஷ், பார்த்தசாரதி, சங்கர், சசிகுமார், தரணி, வெங்கடாச்சலம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் சிவசங்கரன் நன்றி கூறினார்.

Next Story