எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடம்


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடம்
x
தினத்தந்தி 24 May 2018 4:45 AM IST (Updated: 24 May 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் விருதுநகர் மாவட்டம் 98.26 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3-வது இடம் பெற்றது.

விருதுநகர்

நேற்று வெளியான எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளின்படி விருதுநகர் மாவட்டத்தில் தேர்வெழுதிய 26,921 பேரில் 26,453 மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.26 ஆகும். தேர்வெழுதிய 13,253 மாணவர்களில் 12,926 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.53 ஆகும். தேர்வெழுதிய 13,668 மாணவிகளில் 13,527 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.97 ஆகும்.

கடந்த ஆண்டை விட 0.24 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ள நிலையில் இந்த மாவட்டம் மாநில அளவில் 3-வது இடத்தை பெற்றுள்ளது. 1985-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலும் கடந்த ஆண்டும் மாநில அளவில் முதலிடம் பெற்ற இம்மாவட்டம் இந்த ஆண்டு 3-வது இடத்தையே பெற்றுள்ளது. மாவட்டத்திலுள்ள 168 அரசு பள்ளிகளில் தேர்வெழுதிய 9,452 மாணவ-மாணவிகளில் 9,149 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.79 ஆகும். இது மாநில அளவில் 6-வது இடமாகும்.

மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் தேர்வெழுதிய 101 மாணவ-மாணவிகளில் 94 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 93.07 ஆகும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்வெழுதிய 11,203 மாணவ-மாணவிகளில் 11,099 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.07 ஆகும். நகராட்சி பள்ளிகளில் தேர்வெழுதிய 495 மாணவ-மாணவிகளில் 482 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.37 ஆகும்.

பகுதியாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்வெழுதிய 2,089 மாணவ-மாணவிகளில் 2,055 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.37 ஆகும். சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் தேர்வெழுதிய 3,417 மாணவ-மாணவிகளில் 3,411 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.82 ஆகும். சுயநிதி பள்ளிகளில் தேர்வெழுதிய 155 மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 100 ஆகும்.

மொழிப்பாடத்தில் தேர்வெழுதிய 26,921 மாணவ-மாணவிகளில் 26,755 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.38 ஆகும்.

ஆங்கில பாடத்தில் தேர்வெழுதிய 26,921 மாணவ-மாணவிகளில் 26,604 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.82 ஆகும். கணக்கு பாடத்தில் 26,616 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.87 ஆகும். அறிவியல் பாடத்தில் 26,857 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.76 ஆகும். சமூக அறிவியல் பாடத்தில் 26,672 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.08 ஆகும்.

மாவட்டத்தில் 2 பள்ளி மாணவர்கள் 495 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், 2 பள்ளி மாணவர்கள் 494 மதிப்பெண் பெற்று 2-வது இடத்தையும், 6 பள்ளி மாணவர்கள் 493 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தையும் பெற்றுள்ளனர். 307 மாணவ-மாணவிகள் 481 மதிப்பெண்களுக்கு மேலும் 1,680 பேர் 451 முதல் 480 வரையிலும் 1,975 பேர் 426 முதல் 450 வரையிலும் 2,504 பேர் 401 முதல் 425 வரையிலும் 12,349 பேர் 301 முதல் 400 மதிப்பெண் வரையிலும் 7,474 பேர் 201 முதல் 300 வரையிலும் 336 பேர் 176 முதல் 200 வரையிலும் 296 பேர் 175 மதிப்பெண்களுக்கு கீழும் பெற்றுள்ளனர்.

Next Story