நகரும் அதிசயம்


நகரும் அதிசயம்
x
தினத்தந்தி 1 Jun 2018 4:00 AM IST (Updated: 30 May 2018 12:43 PM IST)
t-max-icont-min-icon

கனடாவின் கடற்கரை நகரமான பெர்ரிலாண்ட், திடீரென சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய இடமாக மாறிவிட்டது!

150 அடி உயரமுள்ள மிகப் பெரிய பனிப்பாறை ஒன்று இந்தப் பகுதிக்கு மிதந்து வந்திருக்கிறது.

புவி வெப்பமடைவதால் ஒவ்வோர் ஆண்டும் துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி, உடைந்து, இடம்பெயர்ந்து வருகின்றன. இந்தப் பனிப்பாறையில் 90 சதவீதம் தண்ணீருக்குக் கீழேதான் இருக்கிறது. 1912-ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் மோதிய பனிப்பாறையை விட இது 50 அடி உயரம் அதிகம்.

திடீரென தோன்றிய இந்தப் பனிப்பாறையைப் பார்ப்பதற்கும் புகைப்படங்கள் எடுப்பதற்கும் ஆயிரக் கணக்கானவர்கள் குழுமிவிட்டனர். 2016-ம் ஆண்டில் 687 பனிப்பாறைகள் நகர்ந்து வந்துள்ளன. இந்த ஆண்டு இதுவரை 616 பனிப்பாறைகள் நகர்ந்து வந்துவிட்டன. இவற்றில் இதுவே மிகப் பெரிய பனிப்பாறை. இந்தப் பனிப்பாறையின் வருகையால் சுற்றுலாத் துறை மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறது. 

Next Story