எரிமலையில் பூத்த ரோஜா
லண்டனைச் சேர்ந்த ஆடம்பர மலர்கள் தயாரிக்கும் நிறுவனம், 3 ஆண்டுகள் வாடாத ரோஜா மலர்களை உருவாக்கியிருக்கிறது.
100 சதவீத இயற்கையான ரோஜா மலர்கள் இவை. இந்த ரோஜா செடிக்கு சூரிய ஒளியோ, தண்ணீரோ தேவையில்லை. ஆனாலும் 3 ஆண்டுகள் வாடாமல் ஒரு கண்ணாடிக் குடுவைக்குள் அப்படியே இருக்கும். எப்பொழுதாவது கண்ணாடிக் குடுவையை எடுக்க நேர்ந்தாலும் ரோஜாக்கள் அப்படியேதான் காட்சியளிக்கும். 30 கண்கவர் நிறங்களில் ரோஜாக்கள் காணப் படுகின்றன. ஆனால் இந்த வாடாத ரோஜாக்களின் விலை மிகவும் அதிகம். 13 ஆயிரத்தில் இருந்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை ரோஜாக்களின் வகைகளுக்கு ஏற்ப விற்பனை செய்து வருகிறார்கள்.
இயற்கை மலர்கள் வாடாமல் இருப்பதற்கு, கனிம வளம் நிறைந்த எரிமலை மண்தான் காரணம் என் கிறார்கள். ஈக்வடாரில் உள்ள எரிமலை மண், ரோஜா இதழ்களை, மிக உறுதியாக மாற்றி விடுகின்றன. சாதாரண ரோஜா இதழ்களைவிட 10 மடங்கு தடிமனாகவும் 5 மடங்கு பெரிதாகவும் பூக்க வைக்கின்றன. Forever Rose என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோஜாக்களில் கருஞ்சிவப்பு ஒற்றை ரோஜா அதிகமாக விற்பனையாகி வருகிறது.
Related Tags :
Next Story