பூங்கொத்து விளையாட்டு
ஜாமி ஜாக்சனுக்கு பூங்கொத்துகளைச் சேகரிப்பது பொழுதுபோக்கு.
அமெரிக்காவில் வசிக்கும் ஜாமி ஜாக்சனுக்கு பூங்கொத்துகளைச் சேகரிப்பது பொழுதுபோக்கு. அங்கு நடைபெறும் திருமணங்களில் மணப்பெண் கையில் இருக்கும் பூங்கொத்தை, தூக்கிப் போட்டுப் பிடிப்பது ஒரு சம்பிரதாயம்.
அப்படித் தூக்கிப் போடும் பூங்கொத்துகளை சரியாக பிடித்து, தன் வீட்டு அலமாரியில் சேர்த்து வைக்கிறார், ஜாமி. 37 வயதாகும் ஜாமி, 1996-ம் ஆண்டிலிருந்து பூங்கொத்துகளைச் சேகரித்து வருகிறார். இத்தனை பூங்கொத்துகளை சேகரித்தாலும் ஜாமி இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ‘‘நான் செல்லும் திருமணங்களில் எல்லாம் பூங்கொத்து எனக்கே கிடைத்து விடாது. சில நேரங்களில் வேறு யாராவது எடுத்துச் சென்றுவிடுவார்கள். அதனால் பூங்கொத்து மணப்பெண்ணின் கையில் இருந்து வீசப்படும்போது கவனமாக இருக்கவேண்டும். சில சமயங்களில் அடுத்தவரை தட்டிவிட்டு, பூங்கொத்தை பிடிக்கும்படியாக அமைந்துவிடும். அத்தகைய சூழ்நிலைகளில் வெட்கமோ, தயக்கமோ இல்லாமல் பூங்கொத்துகளைச் சேகரிப்பதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறேன். பொதுவாக மணப்பெண்ணின் பூங்கொத்தை பிடிப்பவர்களுக்கு உடனே திருமணமாகிவிடும் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால் 50 பூங்கொத்துகளை பிடித்தால்தான் திருமணம் என்று என்னுடைய கதையை எழுதியிருக்கிறேன். இன்னும் 4 பூங்கொத்துகளே பாக்கி’’ என்ற ஜாமி, தனது சாதனையை கின்னஸில் பதிய வைக்கும் முயற்சியிலும் இருக்கிறார்.
Related Tags :
Next Story