ரூ. 3 கோடிக்கு ஏலம் போன ஒற்றைப் பக்கம்!
காரல் மார்க்ஸ் கைப்பட எழுதிய ஒற்றைப் பக்கம், 3கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போயிருக்கிறது.
ஜெர்மனி நாட்டின் பொருளாதார அறிஞரும், கம்யூனிச தத்துவவியலாளருமான காரல் மார்க்சின் 200-வது பிறந்தநாள் கடந்த மாதம் கொண்டாடப்பட்டது.
அதனையொட்டி, அவர் எழுதிய ‘டாஸ் கேபிடல்’ புத்தகத்தின் ஒற்றைப் பக்கம், சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஏலம் விடப்பட்டது.
ஆயிரத்து 250 பக்கங்களுக்கும் மேற்பட்ட டாஸ் கேபிடல் புத்தகத்தில் மூலதனம் குறித்து காரல் மார்க்ஸ் கடந்த 1850-ம் ஆண்டு முதல் 1853-ம் ஆண்டு வரை லண்டனில் எழுதினார்.
இந்தப் புத்தகத்தின் ஒற்றைப் பக்கத்தில் காரல் மார்க்சின் கையெழுத்தில் குறிப்புகள் இடம்பெற்றிருந்தன.
அதை பெய்ஜிங்கை சேர்ந்த பெங் லன் என்பவர் வைத்திருந்தார். இந்நிலையில், அந்த கையெழுத்துப் பிரதி 5 லட்சம் அமெரிக்க டாலருக்கு (ரூ. 3.41 கோடி) ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
இந்த விலையானது அடிப்படை விலையை விட பத்து மடங்கு அதிகமாகும். இதேபோல், காரல் மார்க்சின் நண்பரும், பொருளாதார அறிஞருமான பிரெடரிக் ஏங்கெல்சின் ‘கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ’ புத்தகம் 2 லட்சம் அமெரிக்க டாலருக்கு (ரூ. 1.36 கோடி) ஏலம் போனது.
‘டாஸ் கேபிடல்’ புத்தகம் பொருளாதாரத்தில் காரல் மார்க்சின் சிந்தனைகளை அறிந்துகொள்ள உலகின் தலைசிறந்த நூலாகக் கருதப்படுகிறது.
சில விஷயங்களுக்கு எப்போதும் மதிப்பு கூடிக்கொண்டேதான் செல்கிறது!
Related Tags :
Next Story