தூத்துக்குடி மாவட்டத்தில், இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்


தூத்துக்குடி மாவட்டத்தில், இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்
x
தினத்தந்தி 1 Jun 2018 2:00 AM IST (Updated: 31 May 2018 7:30 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்க உள்ள கிராமங்கள் பட்டியலை கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்க உள்ள கிராமங்கள் பட்டியலை கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–

அம்மா திட்ட முகாம் 

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டம் அம்மா திட்டம். அந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தாலுகாவில் மறவன்மடம் கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் மீனாட்சிபுரம் செக்காரக்குடி பகுதி–2 கிராமத்திலும், திருச்செந்தூர் தாலுகாவில் அங்கமங்கலம் கிராமத்திலும், சாத்தான்குளம் தாலுகாவில் அரசூர் பகுதி–1 கிராமத்திலும், கோவில்பட்டி தாலுகாவில் அப்பனேரி கிராமத்திலும், விளாத்திகுளம் தாலுகாவில் எம்.குமாரசக்கனாபுரம் கிராமத்திலும், எட்டயபுரம் தாலுகாவில் உருளைகுடி கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் முறம்பன் கிராமத்திலும், கயத்தாறு தாலுகாவில் ஆசூர் மற்றும் சவலாப்பேரி ஆகிய கிராமங்களிலும் அம்மா திட்ட முகாம் நடக்க உள்ளது.

கோரிக்கை மனுக்கள் 

இந்த முகாம்களுக்கு அந்தந்த தாசில்தார் தலைமை தாங்குகிறார்கள். இந்த முகாம்களில், மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு – இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து மனு கொடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story