நியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்பவர்களின் விவரங்கள் சேகரிப்பு உளவுத்துறையினர் தீவிரம்


நியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்பவர்களின் விவரங்கள் சேகரிப்பு உளவுத்துறையினர் தீவிரம்
x
தினத்தந்தி 1 Jun 2018 4:00 AM IST (Updated: 31 May 2018 11:41 PM IST)
t-max-icont-min-icon

நியூட்ரினோ ஆய்வு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்ட அமைப்புகளை சேர்ந்தவர்களின் விவரங்களை உளவுத்துறையினர் தீவிரமாக சேகரித்து வருகின்றனர்.

தேனி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் துப்பாக்கி சூடு சம்பவங் கள் நடந்தன. இதில் 13 பேர் பலியானார்கள். பலர் படுகாயங்கள் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி வன்முறையில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க, தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்தும் வரும் காலங்களில் வலுவான போராட்டங்கள் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. அதற்கு ஏற்ப சமீப காலங்களாக சமூக வலைதளங்களில் தூத்துக்குடி சம்பவத்தையும், தேனி நியூட்ரினோ திட்டத்தையும் ஒப்பிட்டு பல மீம்ஸ்களும், பதிவுகளும் பகிரப்பட்டு வருகின்றன.

இதனால், நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக் கும் திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டால் தேனி மாவட்டத்திலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக நியூட்ரினோ திட்டத்தை எந்ததெந்த அமைப்புகள் எல்லாம் எதிர்க்கின்றன? எதிர்ப்பவர்கள் யார்? யார்? அவர்களின் விவரங்கள் போன்றவற்றை சேகரிக்கும் பணியில் மத்திய, மாநில உளவுத்துறை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஒருவேளை தொடர் போராட்டங்கள் நடந்தால் அதை யாரொல்லாம் முன்னின்று நடத்த வாய்ப்பு இருக்கிறது? என்பது போன்ற தகவல்களையும் உளவுத்துறை போலீசார் திரட்டி வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், கடந்த 2011-ம் ஆண்டு முல்லைப்பெரியாறு அணை உரிமை மீட்பு போராட்டத்தை முன்னின்று நடத்திய நபர் களின் விவரங்களையும் சேகரித்து, அவர்களின் செயல்பாடுகளையும் கண்காணித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுபோன்ற பணிகள் நடப்பதாக உளவுத்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Next Story