ரூ.15 கோடி செலவில் பல்லாவரம், கீழ்கட்டளை ஏரிகள் புனரமைப்பு பணி தொடங்கியது
பல்லாவரம் பெரிய ஏரி மற்றும் கீழ்கட்டளை ஏரிகளை ரூ.15 கோடி செலவில் புனரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.
தாம்பரம்,
சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை பகுதியில் பல்லாவரம் பெரிய ஏரி உள்ளது. 127 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் மழை காலங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படும்.
ஆனால் இந்த ஏரியை முறையாக பராமரிக்காத பொதுப் பணித்துறை, ஆக்கிரமிப்புகளை தடுக்காத வருவாய்த்துறை, ஆக்கிரமிப்புகளுக்கு சாலை அமைத்து கொடுத்த நகராட்சி, மின்சார வசதி ஏற்படுத்தி கொடுத்த மின்வாரியம் என அனைத்து அரசு துறைகளின் ஒத்துழைப்புடன் இந்த ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது 68 ஏக்கராக சுருங்கி விட்டது.
பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் ரேடியல் சாலை அமைக்கப்பட்டபோது இந்த ஏரி இரண்டாக பிரிக்கப்பட்டு, மேலும் மாசடைய செய்யப்பட்டது.
பல்லாவரம் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த ஏரியின் ஒரு பகுதியில் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் இந்த ஏரியின் ஒரு பகுதி குப்பை மோடாகவே மாறி கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து ஏரியின் ஒரு பகுதியில் உள்ள குப்பைமேட்டை அகற்றி ஏரியை சீரமைக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதைதொடர்ந்து இந்த ஏரியில் கொட்டப்பட்ட குப்பைகளை ரூ.7 கோடி செலவில் ‘பயோ மைனிங்’ முறையில் அகற்ற தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நிர்வாகம் அனுமதி வழங்கியது.
தற்போது பல்லாவரம் நகராட்சியில் ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு உள்ளது. இந்த பணிகள் இன்னும் 1 மாதத்தில் தொடங்க உள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்ட நிதியின் கீழ் ரூ.14 கோடியே 98 லட்சம் செலவில் பல்லாவரம் பெரிய ஏரி, கீழ்கட்டளை ஏரிகள் புனரமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிகளில் புனரமைப்பு பணிகளை பல்லாவரம் நகராட்சி மூலம் செய்ய அரசு அனுமதி அளித்து உள்ளது. அதன்படி தற்போது கீழ்கட்டளை ஏரி மற்றும் பல்லாவரம் பெரிய ஏரியில் புனரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஏரிகளை தூர்வாரி, கரைகள் நீரியல் தன்மை மாறாமல் பலப்படுத்தப்படுகிறது. நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் ஏரிகளுக்குள் வருவதற்கு ஏதுவாக திருகுமறை கதவுகளுடன் கூடிய உள்வாங்கிகள் அமைக்கப்படவுள்ளது.
ஏரியில் கழிவுநீர் கலக்காமல் தடுக்கவும், முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே ஏரியில் விடவும் திட்டமிடப்பட்டு உள்ளது. கீழ்கட்டளை ஏரி, பல்லாவரம் பெரிய ஏரி கரைகள் பலப்படுத்தப்பட்டு, அந்த பகுதி கரைகள் பொதுமக்கள் நடைபயிற்சி செய்யும் இடமாக மாற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது,
இது தொடர்பாக பல்லாவரம் நகராட்சி ஆணையாளர் சிவகுமார், பொறியாளர் கருப்பையா ராஜா ஆகியோர் கூறியதாவது.
பல்லாவரம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. பல்லாவரம் பெரிய ஏரி, கீழ்கட்டளை ஏரி ரூ.14 கோடியே 98 லட்சம் செலவில் புனரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.
பெரிய ஏரியில் கொட்டப்பட்டு உள்ள குப்பைகள் ‘பயோ மைனிங்’ முறையில் அகற்ற ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டு உள்ளது. இந்த பணிகளும் விரைவில் தொடங்கும். பல்லாவரம் பெரிய ஏரி, கீழ்கட்டளை ஏரிகளை சீரமைப்பது மற்றும் பல்லாவரம் பெரிய ஏரியில் கொட்டப்பட்டு உள்ள குப்பைகளை ‘பயோ மைனிங்’ முறையில் அகற்றுவது உள்ளிட்ட 3 பணிகளும் ஒருசேர இன்னும் 1 ஆண்டில் முடிக்கப்படும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story