தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த ரஜினிகாந்த் பேச்சுக்கு இந்து முன்னணி வரவேற்பு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கு இந்து முன்னணி வரவேற்பு தெரிவித்துள்ளது.
திருப்பூர்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ரஜினிகாந்த் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், தூத்துக்குடியில் நடந்த கலவரத்துக்கு, போராட்டத்தில் சமூக விரோதிகள், விஷகிருமிகள் ஊடுருவியதே காரணம் என்று ரஜினிகாந்த் கூறியதை இந்து முன்னணி வரவேற்கிறது.
அமைதியாக முடிய வேண்டிய போராட்டத்தை திசை திருப்பி கலவரம் உண்டாக்கி பொதுமக்களை பலிகடா ஆக்கும் பிரிவினைவாத நக்சல் கும்பல்களை அரசுதடை செய்ய வேண்டும். அவர்களை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்த வேண்டும்.
போராட்டம் வெற்றி பெறும் நிலையில் பொதுமக்களை காவல்துறைக்கு எதிராக திசை திருப்பி மக்களை மீண்டும் போராட வைப்பதுதான் நக்சல்களின் யுக்தி. இதையே தான் ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் நடத்தி காட்டினார்கள். ரஜினிகாந்த் சொன்ன கருத்துக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள், கலவரத்துக்கு காரணம் பொதுமக்கள் தான் என்று கூறுகிறார்களா? சாதாரண பொதுமக்கள் பெட்ரோல் குண்டு வீசினார்கள் என்று பொருள்பட கூறும் இவர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.
தூத்துக்குடி கலவரத்துக்கு காரணமான அமைப்புகளை மாநில அரசு இன்னும் ஏன் தடை செய்து நடவடிக்கை எடுக்கவில்லை? சீனாவில் ஜனநாயக உரிமை கேட்டு போராடிய மாணவர்களை பீரங்கி ஏற்றி கொன்ற போது மவுனம் காத்த கம்யூனிஸ்டுகள் இப்போதும் மனித உரிமைக்காவலர்கள் போல் வேடமிடுவது கம்யூனிஸ்டுகளின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.
தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க எதிர்கால தலைமுறை நிம்மதியாக வாழ்க்கை வாழ போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story