மத்திய அரசை கண்டித்து தபால்துறை ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினர்


மத்திய அரசை கண்டித்து தபால்துறை ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினர்
x
தினத்தந்தி 1 Jun 2018 4:30 AM IST (Updated: 1 Jun 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் தபால்துறை ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

திருச்சி,

மத்திய அரசு ஊழியர்களுக்கு அமைக்கப்பட்ட 7-வது ஊதியக்குழுவின் பலன்களை இலாகா ஊழியர்கள் பெற்று 2½ ஆண்டுகள் ஆன பின்னரும், கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படாமல் புறக் கணிக்கப்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசை கண்டித்தும், கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனே அமல்படுத்த வேண்டும்.

ஜி.டி.எஸ். ஊழியர் சங்க உறுப்பினர்கள் சரிபார்ப்பு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் கூட்டுக்குழு திருச்சி கோட்டம் சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் தபால் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தொடர்ந்து தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக தபால் ஊழியர்கள் திருச்சி தலைமை தபால் நிலைய வளாகத்தில் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். இதில் கோட்ட செயலாளர் மருதநாயகம், மண்டல செயலாளர் கோவிந்தராஜன், கோட்ட தலைவர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story