ராதாபுரம் தாலுகாவில் ரூ.2 கோடியில் ஆன்மிக சுற்றுலாத்தலம் மேம்பாட்டு பணி
ராதாபுரம் தாலுகாவில் ரூ.2 கோடியில் ஆன்மிக சுற்றுலாத்தல மேம்பாட்டு பணி நடைபெற உள்ளது. இந்த பணி நடைபெறும் இடங்களை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு நடத்தினார்.
நெல்லை,
ராதாபுரம் தாலுகா உவரி கப்பல் மாதா ஆலயம், ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்கா, விஜயாபதி விசுவாமித்திரர் ஆலயம் ஆகிய திருத்தலங்களை முக்கோண ஆன்மிக சுற்றுலாத்தலமாக மேம்படுத்துதல் மற்றும் தெற்குகள்ளிகுளம் பனிமயமாதா ஆலயம் உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்தல் ஆகிய பணிகள் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிகள் நடைபெறும் இடங்களை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உவரி செல்வமாதா ஆலயம், திருவம்பலபுரம் ஆத்தங்கரை பள்ளிவாசல் ஷேக்முகமது செய்யது அலி பாத்திமா பள்ளிவாசல், விஜயாபதி விசுவாமித்திரர் ஆலயம் ஆகிய திருத்தலங்களை இணைத்து முக்கோண ஆன்மிக சுற்றுலாத்தலமாக மாற்றிட சுற்றுலாத்துறையின் மூலம் அடிப்படை வசதிகள் மேம்படுத்திடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்கா அருகில் ரூ.6 லட்சம் மதிப்பில் பெண்கள் சுகாதார வளாகம், ரூ.10 லட்சம் மதிப்பில் பயணிகள் காத்திருப்பு கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
உவரி கப்பல் மாதா ஆலயம் அருகில் ரூ.12½ லட்சத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் சுகாதார வளாகம், ரூ.10 லட்சத்தில் பயணிகள் காத்திருப்பு கூடம், ரூ.14 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து புதிய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைத்து தண்ணீர் வசதி செய்தல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளது.
விஜயாபதி விசுவாமித்திரர் ஆலயம் அருகில், ரூ.12½ லட்சத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் சுகாதார வளாகம், ரூ.13½ லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து புதிய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைத்து தண்ணீர் வசதி செய்தல் ஆகிய பணிகள் நடைபெறுகிறது.
தெற்குகள்ளிகுளம் பஞ்சாயத்து அதிசய பனிமயமாதா ஆலயத்தில் ரூ.8 லட்சத்தில் ஆண்கள் சுகாதார வளாகம், ரூ.8 லட்சத்தில் பெண்கள் சுகாதார வளாகம், ரூ.12 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து புதிய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெறுகிறது.
மேலும், உவரி கப்பல் மாதா கோவில் முதல் அந்தோணியார் கோவில் வரை ரூ.39 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் தார்சாலை அமைத்தல், ரூ.31 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் அதிசய பனிமயமாதா ஆலயத்தை சுற்றி தார்சாலை அமைத்தல், அதிசய பனிமயமாதா நகரில் ரூ.21 லட்சத்தில் தார்சாலை அமைத்தல் ஆகிய பணிகள் விரைவில் தொடங்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் முடிவுற்ற பின்னர் இவை சிறந்த ஆன்மிக சுற்றுலாத்தலமாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, சேரன்மாதேவி உதவி கலெக் டர் ஆகாஷ், சுற்றுலா அலுவலர் நெல்சன், ராதாபுரம் தாசில்தார் புகாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சினிவாச சுடலைமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story