தூத்துக்குடி கலவரம் தொடர்பாக இதுவரை 182 பேர் கைது
தூத்துக்குடியில் நடந்த கலவரம் தொடர்பாக போலீசார் இதுவரை 182 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந்தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். மேலும் 65-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். நேற்று முன்தினம் வரை போலீசார் தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 182 பேரை பிடித்து கைது செய்து உள்ளனர்.
மேலும் கலவரம் தொடர்பாக நேற்று காலையில் சிப்காட் போலீசார் 8 பேரையும், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கலவரத்தை தூண்டும் வகையில் பதிவு செய்தவர்களையும் சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின் றனர்.
மேலும் வாட்ஸ்அப் மூலம் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக திரவியபுரத்தை சேர்ந்த ஒருவரை நேற்று முன்தினம் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story