பிளஸ்-1 தேர்வில் தோல்வி: தீக்குளித்த மாணவி பரிதாப சாவு
சேலம் அருகே பிளஸ்-1 தேர்வில் தோல்வி அடைந்ததால் தீக்குளித்த மாணவி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
சூரமங்கலம்,
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஆண்டிப்பட்டி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நாகம்மாள். இவர்களது மகள் ரவீனா (வயது 16). இவர் மேச்சேரியில் உள்ள அவருடைய பாட்டி வீட்டில் தங்கி இருந்து, அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கோடை விடுமுறைக்காக தனது பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவி ரவீனா தோல்வி அடைந்தார். இது குறித்து கவலைப்பட வேண்டாம் என செல்வம் தனது மகளிடம் கூறினார். இருந்தபோதிலும் ரவீனா வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் காணப்பட்டார். மேலும் அவருக்கு ஆறுதல் கூறி விட்டு நாகம்மாள் பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்று விட்டார்.
இதைத்தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாதபோது ரவீனா மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் மாணவியின் உடல் கருகி ஆபத்தான நிலையில் இருந்தவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று காலை ரவீனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையறிந்து அங்கு வந்த மாணவியின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சூரமங்கலம் போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story