கார் மீது லாரி மோதி விபத்து 6 பெண்கள் உள்பட 11 பேர் பலி

யவத்மாலில் கார் மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் 6 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். இவர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய போது விபத்தில் சிக்கினர்.
புனே,
மராட்டிய மாநிலம் யவத்மாலில் உள்ள கோஸ்டானி காட் பகுதியில் நேற்று அதிகாலை 4 மணியளவில் கார் ஒன்று நாந்தெட் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த லாரி கண் இமைக்கும் நேரத்தில் கார் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் கார் உருக்குலைந்து போனது. லாரியும் பலத்த சேதம் அடைந்தது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 10 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்கள்.
மேலும் காரில் ஒரு சிறுமி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தாள். விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவளும் உயிரிழந்தாள். இதனால் சாவு எண்ணிக்கை 11 ஆனது. பலியானவர்களில் 6 பேர் பெண்கள் ஆவர்.போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதில், பலியானவர்கள் டெல்லி, அரியானா மற்றும் நாக்பூரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. நாக்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு அவர்கள் நாந்தெட்டில் உள்ள குருத்வாராவுக்கு சென்று கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கி பலியானது தெரியவந்தது.

Related Tags :
Next Story