10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியாகிறது


10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியாகிறது
x
தினத்தந்தி 2 Jun 2018 5:20 AM IST (Updated: 2 Jun 2018 5:20 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் எஸ்.எஸ்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இந்த தேர்வினை மாநிலம் முழுவதும் சுமார் 17 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி இருந்தனர். கடந்த 30-ந் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதையடுத்து, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்தநிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக மாநில உயர் மற்றும் மேல்நிலை கல்வி வாரிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.

இதுபற்றி கல்வி வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வருகிற 10-ந் தேதிக்குள் வெளியிடப்பட்டு விடும். மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை mahresult.nic.in. என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்’ என்றார். 

Next Story