தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் நேரில் விசாரணை
துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் நேரில் விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் நேரில் விசாரணை நடத்தினர். கலவரம் நடந்த இடங்களை அவர்கள் பார்வையிட்டனர்.
தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலி ஆனார்கள். பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக தேசிய மனித உரிமை ஆணைய குழு நேற்று மாலை தூத்துக்குடிக்கு வந்தது. இந்த குழுவில் தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினரும், மூத்த போலீஸ் சூப்பிரண்டுமான புபுல் பிரிட்டோ பிரசாத் தலைமையில், உறுப்பினர்கள் ரஜ்வீர்சிங், நிதின்குமார், அருண் தியாகி, லால் பகர் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
இவர்கள் மாலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் தங்கள் விசாரணையை தொடங்கினார்கள்.
அப்போது அவர்கள், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். பல்வேறு வீடியோ பதிவு காட்சிகளையும் பார்வையிட்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கலவரத்தின்போது ஜன்னல், கதவுகள் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டு இருந்ததையும், இருசக்கர வாகனங்கள், கார்கள் தீவைத்து எரிக்கப்பட்டு சேதமடைந்து கிடப்பதையும் பார்வையிட்டனர். தொடர்ந்து அவர்கள் கலவரம் நடந்த ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் தீவைக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டனர்.
இந்த குழுவினர் வருகிற 7-ந் தேதி வரை பல்வேறு தரப்பினரையும் சந்தித்து விசாரணை நடத்த உள்ளனர்.
இதேபோல், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் ஜெயச்சந்திரன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சித்தரஞ்சன்மோகன்தாஸ் மற்றும் மனித உரிமை பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சத்தியபிரபா, உதவி பதிவாளர் வாசுதேவன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணபிரபு ஆகியோர் நேற்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தனர்.
பின்னர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று, அங்கு கலவரத்தின்போது சேதம் அடைந்த பகுதிகள், தீவைத்து எரிக்கப்பட்ட வாகனங்களை பார்வையிட்டனர். அப்போது, கலெக்டர் சந்தீப் நந்தூரி கலவர சம்பவங்கள் குறித்து அவர்களிடம் விளக்கி கூறினார். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பதிவான வீடியோக்கள் மற்றும் கலவர காட்சிகளையும் ஆணைய உறுப்பினர்கள் பார்வையிட்டனர். கலெக்டரிடமும் ஆலோசனை நடத்தினர்.
கலெக்டர் அலுவலகம் அருகே தீவைத்து எரிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பு பகுதி மற்றும் வாகனங்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.
அதன்பிறகு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, கலவரத்தின் போது காயம் அடைந்து அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர். மேலும், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
கடந்த 22-ந் தேதி பனியமயமாதா ஆலயம் அருகே ஊர்வலம் தொடங்கிய இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிர் இழந்த கார்த்திக், சண்முகம் ஆகியோர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
இந்த விசாரணை குறித்து மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், கலவரம் தொடர்பாக பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி உள்ளோம். போலீஸ் அதிகாரிகளிடம் சம்பவம் குறித்து கேட்டு அறிந்தோம். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 56 பேரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இறந்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி ஓரிரு நாட்களில் மாநில மனித உரிமை ஆணைய தலைவரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நாளை(திங்கட்கிழமை) தூத்துக்குடி சென்று விசாரணையை தொடங்குகிறார்.
இந்த விசாரணை கமிஷனின் தலைமை அலுவலகம் சென்னையில் நீதிபதிகள் குடியிருப்பு, என்.சி.பி. 28, குமாரசாமி ரோடு, கிரீன்வேஸ் சாலை, சென்னை-28 என்ற முகவரியில் செயல்படும். தூத்துக்குடி பழைய விருந்தினர் மாளிகையில் முகாம் அலுவலகத்திலும் விசாரணை ஆணையம் செயல்பட இருக்கிறது.
இதுபற்றி நேரடியாக தெரிந்தவர்களும், நேரடி தொடர்பில் உள்ளவர்களும் அவரவருக்கு தெரிந்த தகவல்களை சத்திய பிரமான உறுதிமொழி பத்திரவடிவில் விசாரணை ஆணையத்தில் தலைமை அலுவலகம், முகாம் அலுவலகத்தில் நேரிலோ, தபால் மூலமோ வருகிற 22-ந் தேதி வரை வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story