பாளையங்கோட்டை, தென்காசியில் தபால் ஊழியர்கள் நூதன போராட்டம்
ஊதிய உயர்வு வழங்கக் கோரி, பாளையங்கோட்டை, தென்காசியில் தபால் ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
கிராமப்புற தபால் ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான கமலேஷ் சந்திரா பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். தபால் ஊழியர்களின் குழந்தைகளின் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். காப்பீட்டு திட்ட தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து இந்திய கிராமிய தபால் ஊழியர் சங்க கூட்டு போராட்ட குழு நெல்லை மாவட்டம் சார்பில், கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. நேற்று 12-வது நாளாக தபால் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் நீடித்தது. இதனால் கிராமப்புற தபால் அலுவலகங்களில் தபால்கள் தேங்கின. தபால் சேவைகள் பாதிக்கப்பட்டன.
அனைத்து இந்திய கிராமிய தபால் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் நேற்று பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், மேல்சட்டை அணியாமல் அரை நிர்வாணத்துடன் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பினர். சங்க நிர்வாகிகள் நடராஜன், பாட்ஷா, ஞான பாலசிங், பெரியதுரை, நம்பி, லட்சுமணன், சின்னத்தம்பி, செல்வம், சாகுல், அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தென்காசி தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று கிராமப்புற தபால் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, மேல்சட்டை அணியாமலும், திருவோடு ஏந்தியவாறும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க கோட்ட தலைவர் நெல்லையப்பன் தலைமை தாங்கினார். பொருளாளர் கோமதிநாயகம், செயலாளர் பூ ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story