பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு
கிருஷ்ணகிரியில் குடும்ப பிரச்சினையால் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் காந்திமதி (வயது 43). தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த போடூர் கிராமத்தை சேர்ந்த இவருக்கும், பாலக்கோடு அடுத்த பெல்ரம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது.
முருகன் தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள விடுதியின் காப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் 12-ம் வகுப்பும், இளைய மகன் 10-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். ஏட்டு காந்திமதி குடும்பத்துடன் கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கணவன் - மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ஏட்டு காந்திமதி துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குப்போட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், டவுன் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிருஷ்ணகிரியில் மகளிர் போலீஸ் ஏட்டு குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு எடுத்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story