மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை திருமணமான 3 மாதத்தில் சோகம்


மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை திருமணமான 3 மாதத்தில் சோகம்
x
தினத்தந்தி 3 Jun 2018 4:45 AM IST (Updated: 3 Jun 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

தூசி அருகே திருமணமான 3 மாதத்தில் மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூசி,

தூசியை அடுத்த மாமண்டூர் கிராமத்தை சேர்ந்த கருணாகரன் மகன் சதீஸ் (வயது 28). இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஜம்முகாஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். புதுச்சேரி கரியம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த கயல்விழி (26) என்பவரை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சதீஸ் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். அவர் நேற்று காலை 10 மணியளவில் தனது மனைவி கயல்விழியிடம் நான் வேலைக்கு செல்கிறேன். நீ இங்கேயே இரு என்று கூறியுள்ளார். அதற்கு கயல்விழி, நான் இங்கு இருக்க மாட்டேன். உங்களுடன் வருகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

தூக்கில் தொங்கினார்

பின்னர் கயல்விழி குளிக்க சென்றுவிட்டார். இந்த சம்பவத்தால் மனவேதனை அடைந்த சதீஸ் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சதீஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story