பெரம்பலூர் மாவட்டத்தில் 273 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18¾ லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் 273 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18¾ லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்களை கலெக்டர் சாந்தா வழங்கினார்.
பெரம்பலூர்,
தமிழகத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்புடைய அரசு துறைகளை உள்ளடக்கி சிறப்பு மருத்துவ மறுவாழ்வு முகாம்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ மறுவாழ்வு முகாம்கள் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா பெரம்பலூரில் உள்ள கவுதமபுத்தர் சிறப்பு பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.
இந்த விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். மருதராஜா எம்.பி., ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கலெக்டர் சாந்தா பேசியதாவது:-
பெரம்பலூர் மாவட்டத்தில், உள்ள நான்கு தாலுகா அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ மறுவாழ்வு முகாம்கள் நடத்தப்பட்டது. அப்போதும் மாற்றுத்திறனாளிகள் பலருக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
முகாம் முடிவில் பெங்களூருவில் இயங்கி வரும் மத்திய அரசின் அலிம்கோ நிறுவன அதிகாரிகள் மற்றும் பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரிகள் கணக்கீடு செய்து எத்தனை நபர்களுக்கு எத்தனை வகையான உபகரணங்கள் தேவைப்படுகிறது என்ற புள்ளி விவரங்கள் மற்றும் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட 273 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தேவையான உதவி உபகரணங்கள் இந்த விழாவில் வழங்கப்படுகிறது. மத்திய-மாநில அரசுகள் மாற்றுத்்திறனாளிகளுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கி வருகின்றது. எனவே அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளும் இந்த திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் சாந்தா பேசினார்.
விழாவில் கலெக்டர் சாந்தா 273 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 82 ஆயிரத்து 874 மதிப்பிலான மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலி, நவீன செயற்கை அவையங்கள், காதொலி கருவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கினார்.
முன்னதாக விழாவில் பெங்களூரு அலிம்கோ நிறுவனத்தின் மேலாளர் அனுபம் பிரகாஷ் வரவேற்றார். முடிவில் பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அதிகாரி பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் மற்றும் மாற்றுத்திறனாளிகள், அவரது பெற்றோர், உறவினர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story