ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் ரூ.50 லட்சம் செலவில் உள்நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் விடுதி - அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்


ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் ரூ.50 லட்சம் செலவில் உள்நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் விடுதி - அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 3 Jun 2018 5:00 AM IST (Updated: 3 Jun 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில், ரூ.50 லட்சம் செலவில் உள்நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் விடுதியை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்.

நெல்லை,

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நெல்லை மாநகராட்சி மூலம் ரூ.50 லட்சம் செலவில் உள்நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை தாங்கினார். எஸ்.முத்துக்கருப்பன் எம்.பி. முன்னிலை வகித்தார். ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார்.

விழாவில் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் கண்ணன், துணை முதல்வர் ரேவதிபாலன், நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் அய்யப்பன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், பொருளாளர் தச்சை கணேசராஜா, நெல்லை புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் காபிரியேல் ஜெபராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story