ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தில் அரசு அலுவலர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி


ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தில் அரசு அலுவலர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி
x
தினத்தந்தி 3 Jun 2018 5:00 AM IST (Updated: 3 Jun 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

மனித வள மேலாண்மை திட்டத்தில் அரசு அலுவலர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி தொடங்கியது.

கடலூர்,

கடலூரில், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தில் அரசு அலுவலர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி தொடங்கியது. பயிற்சியை சென்னை கருவூல கணக்குத்துறை முதன்மை செயலாளர் தென்காசி சு.ஜவஹர் ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தின் திறனூட்டல் பயிற்சி கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரியில் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. இதை கலெக்டர் தண்டபாணி தொடங்கி வைத்தார். இதில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தை சிறப்பாக நடைமுறை படுத்துவது தொடர்பாக கருவூல கணக்குத்துறை அலுவலர்கள், அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி அதே கல்லூரியில் தொடங்கியது.

இந்த பயிற்சியை கலெக்டர் தண்டபாணி முன்னிலையில் சென்னை கருவூல கணக்குத்துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் தென்காசி சு.ஜவஹர் ஆய்வு செய்தார். அப்போது பயிற்சியை அரசு அலுவலர்கள் திறம்பட முடித்து, அனைத்தையும் கணினி மூலம் செயல்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், கடந்த 2017-18-ம் நிதி ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் ரூ.617 கோடியே 48 லட்சம் ஓய்வூதியமாகவும், அரசு ஊழியர்களுக்கான ஊதியமாக ரூ.863 கோடியே 72 லட்சமும், மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள 8 சார் நிலை கருவூல அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அரசின் வரவினமாக இந்த நிதி ஆண்டில் மட்டும் கடலூர் மாவட்டத்தில் ரூ.560 கோடியே 74 லட்சம் அரசு கணக்கில் கருவூலங்கள் வழியாக சேர்க்கப்பட்டுள்ளது என்றார்.இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், கருவூலம் மற்றும் கணக்குத்துறை கூடுதல் இயக்குனர் மகாபாரதி, மண்டல இணை இயக்குனர் திருஞானசம்பந்தம், கடலூர் கருவூல அலுவலர் ரவிசங்கர் மற்றும் அனைத்துத்துறை பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story