இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 3 Jun 2018 5:40 AM IST (Updated: 3 Jun 2018 5:40 AM IST)
t-max-icont-min-icon

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மும்பை,

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள மாட்டுங்கா - தானே ரெயில் நிலையங்களுக்கு இடையே ஸ்லோ வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.20 மணி முதல் மாலை 4.20 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது.

இதன்காரணமாக சி.எஸ்.எம்.டி., தாதரில் இருந்து செல்லும் ஸ்லோ மின்சார ரெயில்கள் காலை 10.57 மணி முதல் மாலை 4.20 மணி வரை மாட்டுங்கா - முல்லுண்டு இடையே விரைவு வழித்தடத்தில் திருப்பி விடப்படும். இந்த ரெயில்கள் சயான், குர்லா, காட்கோபர், விக்ரோலி, பாண்டுப், முல்லுண்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

முல்லுண்டுக்கு பின் இந்த ரெயில்கள் மீண்டும் ஸ்லோ வழித்தடத்தில் திருப்பி விடப்படும். இந்த நேரத்தில் கல்யாண் நோக்கி செல்லும் மார்க்கத்தில் வித்யாவிகார், காஞ்சூர்மார்க், நாகுர் ஆகிய இடங்களில் ரெயில் சேவை இருக்காது.

பராமரிப்பு பணியின் போது, சி.எஸ்.எம்.டி. நோக்கி வரும் விரைவு மின்சார ரெயில்கள் காலை 10.54 மணி முதல் பிற்பகல் 3.06 மணி வரை திவா, முல்லுண்டு, பாண்டுப், விக்ரோலி, காட்கோபர், குர்லா மற்றும் வழக்கமான ரெயில் நிலையங்களில் நின்று வரும்.

சி.எஸ்.எம்.டி.யில் இருந்து செல்லும் விரைவு மின்சார ரெயில்கள் காலை 10.48 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை காட்கோபர், விக்ரோலி, பாண்டுப், முல்லுண்டு, திவா மற்றும் வழக்கமான ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி. - சுன்னாப்பட்டி, பாந்திரா இடையே இருமார்க்கத்திலும் காலை 11.10 மணி முதல் மாலை 4.40 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது.

இதன் காரணமாக சி.எஸ்.எம்.டி.- பன்வெல், பேலாப்பூர், வாஷி, அந்தேரி, பாந்திரா, கோரேகாவ் இடையிலான ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. இருப்பினும் பன்வெல் - குர்லா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்த தகவல் மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story