கருணாநிதி பிறந்த நாள் விழா


கருணாநிதி பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 4 Jun 2018 4:00 AM IST (Updated: 3 Jun 2018 11:55 PM IST)
t-max-icont-min-icon

ஆப்பூர், அஞ்சூர் ஊராட்சிகளில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

செங்கல்பட்டு.

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த ஆப்பூர் ஊராட்சியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். விழாவில் காஞ்சீபுரம் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தானம், முன்னாள் ஊராட்சிமன்றதலைவர் ரவிச்சந்திரன். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒரகடம் சென்னகுப்பம் பகுதியில் சிலம்புச்செல்வம் கட்சி கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார்.

இது போல சிங்கப்பெருமாள் கோவில் பஜார் வீதியில் நடந்த விழாவுக்கு ஊராட்சி தி.மு.க. செயலாளர் கே.பி. ராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.சி.ஜெ.ரத்திஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ. அன்பரசன் எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் தண்டபாணி, ஆகியோர் கலந்து கொண்டு கேக் வெட்டி 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்கள். விழாவில் இளைஞர் அணி தலைவர் திருத்தேரி சண்முகம், ஊராட்சி பிரதிநிதி பாரேரி ஆறுமுகம், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் கலைவாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அஞ்சூர் ஊராட்சியில் மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் கட்சி கொடியேற்றி 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானங்கள் வழங்கினார். பரனூர் அரசு தொழுநோயாளிகள் இல்லத்தில் தா.மோ. அன்பரசன் எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு உணவு மற்றும் ஆடைகளை வழங்கினார்கள்.

Next Story