ஓட்டல் அதிபர் மனைவிக்கு ‘நிபா’ வைரஸ் காய்ச்சல்? திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
கேரளா சென்று திரும்பிய ஓட்டல் அதிபர் மனைவிக்கு ‘நிபா‘ வைரஸ் காய்ச்சல் இருக்குமோ என்ற அச்சத்தில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்சி,
கேரள மாநிலத்தில் ‘நிபா‘ வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலின் பாதிப்பால் இதுவரை 20-க்கும் மேற்பட்டவர்கள் கேரளாவில் உயிரிழந்துள்ளனர். காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளித்த நர்சும் பலியான சம்பவமும் நடந்துள்ளது.
கடந்த மாதம் கேரளாவுக்கு, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள திருநெல்லிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்ற தொழிலாளி சாலைப்பணிக்காக சென்று திரும்பினார். அப்போது அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் ‘நிபா‘ வைரஸ் காய்ச்சல் தாக்கம் இருக்கலாம் என கருதி, அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் கேரளா சென்ற மேலும் ஒரு பெண் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு உள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவர் தில்லைநகர் 10-வது குறுக்குத்தெருவில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது 63). இவர்களின் மகன் கார்த்திக். இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். அடிக்கடி கேரளா மாநிலம் கல்கேட் செல்வது வழக்கம்.
சமீபத்தில் தாயார் ராஜேஸ்வரியை அழைத்துக்கொண்டு கார்த்திக் கேரளா சென்றார். அங்கு அவருக்கு சளி, இருமல் ஏற்பட்டு காய்ச்சல் வந்தது. அதற்காக மகன் கொடுத்த மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். ஆனாலும் குணமாகவில்லை.
இந்தநிலையில் சொந்த ஊரான திருச்சி ராகவேந்திரா நகருக்கு ராஜேஸ்வரி வந்தார். ஆனாலும் காய்ச்சல் விட்டபாடில்லை. அதைத்தொடர்ந்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். கேரளா சென்று வந்தவருக்கு ‘நிபா‘ வைரஸ் காய்ச்சல் வந்திருக்கலாமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அனிதா தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் ராஜேஸ்வரியின் ரத்தம், சளி ஆகியவற்றை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
இது தொடர்பாக டீன் டாக்டர் அனிதா கூறுகையில், “கேரளா சென்ற ராஜேஸ்வரிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவரது மகன் மருந்து விற்பனை பிரதிநிதி என்பதால், அவர் கொடுத்த மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார். திருச்சி வந்ததும் காய்ச்சல் அதிகமாகி இருக்கிறது. அவருக்கு ‘நிபா‘ வைரஸ் தாக்கம் உள்ளதா? என்பதை உடனடியாக கண்டறிய முடியாது. திருச்சி மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் ‘நிபா‘ வைரஸ் காய்ச்சல் ஏற்படவில்லை. இருப்பினும் ராஜேஸ்வரிக்கு தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

Related Tags :
Next Story