மின்சாரம் தாக்கி மாணவன் உள்பட 2 பேர் பலி


மின்சாரம் தாக்கி மாணவன் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 4 Jun 2018 5:30 AM IST (Updated: 4 Jun 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையில் மின்கம்பி அறுந்து அவர்களது வயலில் கிடந்தது. மின்சாரம் தாக்கி மாணவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.

பள்ளிப்பட்டு,

பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் கேசவராஜுகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 49). இவரது மனைவி குப்பம்மாள் (44). இவர்களுக்கு ரத்தினம் (24), சந்திரா (22), ரம்யா (19), தேவி (14) என 4 மகள்கள் உள்ளனர். இவர்களில் ரத்தினம், சந்திரா ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது. தேவி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

டி.டி.கண்டிகை கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை சேகர் குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வந்தார். சேகரின் மைத்துனர் கங்காதரம் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அருகே அப்பம்பேடு கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது மகன் பரத் (12) சேகர் வீட்டிற்கு வந்து இருந்தான். பரத் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை ரம்யா ஆடுகளை ஓட்டி கொண்டு வயலுக்கு சென்றார். அவருடன் சிறுவன் பரத்தும் சென்றான். நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையில் மின்கம்பி அறுந்து அவர்களது வயலில் கிடந்தது.

இதை கவனிக்காத அவர்கள் இருவரும் அந்த மின்கம்பியை மிதித்து விட்டனர். இதில் மின்சாரம் தாக்கி ரம்யாவும், மாணவன் பரத்தும் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த னர். அவர்கள் ஓட்டி சென்ற ஆடுகளில் 2 ஆடுகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தன. தகவல் கிடைத்ததும் பொதட்டூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

மின்துறை ஊழியர்களும் விரைந்து சென்று அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story