எந்த சூழ்நிலையிலும் இந்து முன்னணி அரசியலில் ஈடுபடாது மாநாட்டில் ராம.கோபாலன் பேச்சு
எந்த சூழ்நிலையிலும் இந்து முன்னணி அரசியலில் ஈடுபடாது என்று தர்மபுரியில் நடந்த மாநாட்டில் ராம.கோபாலன் பேசினார்.
தர்மபுரி,
சேலம் கோட்ட இந்து முன்னணி சார்பில் தமிழக பாதுகாப்பு மாநாடு தர்மபுரி வள்ளலார் திடலில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தர்மபுரி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார், மாநில செயலாளர்கள் மனோகர், தாமு வெங்கடேஸ்வரன், அண்ணாதுரை, மாநில அமைப்பாளர் பக்தவச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மாநாட்டில் இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்து முன்னணி இயக்கம் யாருக்காகவும், எதற்காகவும் பரிந்து பேசாத இயக்கமாக திகழ்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ராமானுஜம் என்னை சென்னையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்திற்கு வந்து சந்தித்து பேசினார். அப்போது எனக்கு ராஜ்யசபா எம்.பி. சீட்டு வாங்கி தர வேண்டும் என்றும், அதற்காக நீங்கள் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்கு நான் இந்து முன்னணி எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களுக்காகவோ, பதவிக்காவோ, வேறு எதற்காகவோ பரிந்துரை செய்யாது என்று கூறி விட்டேன். இந்த இயக்கம் சமுதாயத்தில் இந்து மக்களுக்காக போராடும் அமைப்பாகும்.
தமிழகத்தில் தற்போது பிரிவினைவாத சக்திகள் பல்வேறு கோஷங்கள் வடிவிலும், அமைப்பின் வடிவிலும் உலாவி வருகின்றன. இந்த பிரிவினைவாத சக்திகளை நாட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். இதற்காக இந்து முன்னணி போராடும். எந்த கஷ்டம் வந்தாலும், எந்த சூழ்நிலையிலும் இந்து முன்னணி அரசியலில் ஈடுபடாது. பா.ஜனதாவில் நமது நண்பர்கள் இருந்தாலும், அது அரசியல் இயக்கம். நாம் சமுதாய இயக்கம். எனவே இந்துக்கள் ஒற்றுமைக்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.
இவ்வாறு ராம.கோபாலன் பேசினார்.
இந்த மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ்ஜீ, இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளின் தலைவர்கள், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் தர்மபுரி மாவட்ட இந்து முன்னணி துணைத்தலைவர் முரளி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story