தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தப்பிச்சென்ற 6 அகதிகள் பிடிபட்டனர்
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தப்பிச்சென்ற 6 அகதிகள் பிடிபட்டனர், அவர்களை அழைத்துச்சென்ற 2 படகோட்டிகளும் சிக்கினர்.
ராமேசுவரம்,
இலங்கை கடல் பகுதியில் அந்நாட்டு கடற்படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய கடல் எல்லையில் இருந்து இலங்கை கடல் பகுதிக்குள் சென்ற படகை பிடித்து சோதனையிட்டு இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தினர்.
அதில் இருந்த 8 பேரிடம் விசாரித்தபோது, தமிழக அகதிகள் முகாமில் இருந்து 6 பேர் தப்பித்து இலங்கைக்கு சென்றதும், அவர்களை மன்னாரை சேர்ந்த படகோட்டிகள் 2 பேர் அழைத்து சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து 8 பேரையும், படகையும் காங்கேசன் துறை போலீஸ் நிலையத்தில் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story