நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு
நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்துவது என்று சத்துணவு ஊழியர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் கண்ணுச்சாமி தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சீமைச்சாமி வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் பாண்டி, மாவட்ட துணைத் தலைவர்கள் பாலசுப்பிரமணியன், பழனியப்பன், மலர்கொடி, முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சத்துணவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு வழங்கும் சத்துணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், சத்துணவு துறையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
சத்தணவு மானிய கோரிக்கையில் சத்துணவு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று(திங்கட்கிழமை) சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொருளாளர் பானுமதி நன்றி கூறினார்.