2ஜி வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் - சுப்பிரமணியசாமி பேட்டி


2ஜி வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் - சுப்பிரமணியசாமி பேட்டி
x
தினத்தந்தி 4 Jun 2018 4:15 AM IST (Updated: 4 Jun 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே கீழவளவில் ஜனதா கட்சியின் நிர்வாகி இல்ல திருமண விழாவிற்கு பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி வந்தார்.

மேலூர்,

மேலூர் அருகே கீழவளவில் ஜனதா கட்சியின் நிர்வாகி இல்ல திருமண விழாவிற்கு கலந்து கொள்ள பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி வந்தார். திருமணத்தை நடத்தி வைத்த பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் 3 போலீசார் தற்கொலை செய்து கொண்டது, தீவிரவாத இயக்கம், நக்சல் போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆகியவற்றால் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. நம்மை காவல் காக்கும் காவல்துறையினரை காப்பாற்ற அரசாங்கம் நடவடிகை எடுக்க வேண்டும். 2ஜி வழக்கின் மேல்முறையீட்டில் நியாயமான தீர்ப்பு கிடைக்கும். மதுரை விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்டத்தில் நேதாஜியுடன் சேர்ந்து போராடிய முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்டி, அங்கே அவருக்கு சிலை நிறுவ வேண்டும் என்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளேன், தமிழக அரசும் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story