நெல்லை மாவட்டத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


நெல்லை மாவட்டத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 4 Jun 2018 2:00 AM IST (Updated: 4 Jun 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கட்சி கொடியேற்றியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கட்சி கொடியேற்றியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

தென்காசி

தென்காசி நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தென்காசி காந்தி சிலை அருகில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 3 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன. உள்நோயாளிகள் சுமார் 250 பேருக்கு பழங்கள் வழங்கப்பட்டன. 10 பேர் ரத்த தானம் செய்தனர்.

கூளக்கடை பஜாரில் முன்னாள் நகரசபை தலைவர் கோமதிநாயகம் 95 பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சிகளுக்கு தென்காசி நகர செயலார் சாதிர் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சொக்கலிங்கம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சாமித்துரை, நகர நிர்வாகிகள் நடராஜன், பால்ராஜ், ஷேக்பரீத், கலை பால்துரை, நகர விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் மோகன் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை

செங்கோட்டை கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் ஐந்தருவி ஓம் பிரணவா ஆசிரம குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. சங்க செயலாளர் வழக்கறிஞர் ஆபத்துக்காத்தான், ஆசிரமத்தில் தங்கி படிக்கும் குழந்தைகளுக்கு இனிப்புடன் கூடிய காலை உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் கலைஞர் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் இசக்கிமுத்து, நாட்டாண்மை ஆறுமுகம், ஜோதிமணி, வேலுமணி, ராமகிருஷ்ணன், அய்யம்பெருமாள், வினோத், பேச்சிமுத்து, வன்னியராஜா, வேல்சாமி, பிச்சைமுத்து, மேசன் காளி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை நகர தி.மு.க. சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நகர செயலாளர் ரஹீம் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வக்கீல் வெங்கடேசன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் லிங்கராஜ், கலைஞர் தமிழ்ச் சங்க செயலாளர் வக்கீல் ஆபத்துகாத்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் பிரிவு நிர்வாகி அமானுல்லா கான் வரவேற்றார். செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ரொட்டி, பிஸ்கட், பழங்கள் வழங்கப்பட்டன.

செங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு, பணிமனை தலைவர் தம்பு தலைமை தாங்கினார். மத்திய சங்க செயலாளர் திருமலைகுமாரசாமி, செயற்குழு உறுப்பினர் திருமலை வேல்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வகுமார் வரவேற்றார். நகர செயலாளர் ரஹீம் கட்சி கொடியையும், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கோபால் தொழிற்சங்க கொடியையும் ஏற்றி வைத்தனர். நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் முத்தையா, மகேசுவரன், மகேஷ், மகேந்திரன், பாலசுப்பிரமணியன், ராசையா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கோமதிசங்கர் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காதர் அண்ணாவி, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் வல்லம் செல்லத்துரை, தலைமை கழக பேச்சாளர் குத்தாலிங்கம், நகர அவை தலைவர் காளி, மாவட்ட பிரதிநிதிகள் பால் அய்யப்பன், கல்யாணி, நகர துணை செயலாளர்கள் பாஞ்ச் பீர்முகம்மது, குட்டிராஜா, மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் மேரி அந்தோணிராஜ், மாவட்ட துணை அமைப்பாளர் பத்மாவதி, நகர இளைஞர் அணி மணிகண்டன், மாணவர் அணி நிர்வாகி அஜீம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கடையம்

கடையம் ஒன்றிய தி.மு.க. சார்பில் ஆழ்வார்குறிச்சி பஸ்நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. ரவணசமுத்திரம், கடையம், பொட்டல்புதூர், சேர்வைக்காரன்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

கடையம் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் குமார் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் ஷாஜகான், கடையம் வட்டார மருத்துவ அலுவலர் பழனிகுமார், மாவட்ட மகளிரணி செல்வி சங்குகிருஷ்ணன், புதுகால் பாசன கமிட்டி சங்குகிருஷ்ணன், விவசாய அணி ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி அய்யன்சாமி, மூத்த முன்னோடி சுலைமான், மாவட்ட துணை செயலாளர் சரஸ்வதி நாராயணன், ஆழ்வை நகர செயலாளர் பொன்சுந்தரம், ஒன்றிய துணை செயலாளர் தமிழ் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொருளாளர் துரை, சங்கிலிபூதத்தான், முதலியார்பட்டி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் அஜீஸ் அகமது, மாணவரணி ஏ.ஓன்.துரை, பாதுஷா, முகம்மதுஅலி, சிவராமன், சுரேஷ், சைலப்பன், இளைஞரணி சைலு, இசக்கி, மகளிரணி யோகலட்சுமி, கிளை செயலாளர் கே.பி.என்.சேட், மகேந்திரன், ஐயப்பன், சிங்ககுட்டி, கருத்தபாண்டி, கண்ணன், அருள், கதிரேசன், உதயசூரியன், நவாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்பை

அம்பையில் நகர செயலாளர் பிரபாகரன் தலைமையில் கிருஷ்ணன் கோவில் அருகே கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் அம்பை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அவை தலைவர் ஆறுமுகம், துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் அண்ணாத்துரை, காந்திமதிநாதன், மாவட்ட இலக்கிய அணி ராமசாமி, துணை அமைப்பாளர் ராமையா, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் வசந்தா ஆரோக்கியமேரி, முன்னாள் கவுன்சிலர்கள் பிச்சையா, காஜா முகைதீன், கோவிந்தராஜ், சுப்பிரமணியன், அலெக்சாண்டர், பேராசிரியர் அழகுமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கல்லிடைக்குறிச்சி

கல்லிடைக்குறிச்சியில் பஸ்நிலையம் அருகில் நகர செயலாளர் இசக்கிபாண்டியன் தலைமையில் கட்சி கொடியேற்றப்பட்டது. பின்னர் அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை செயலாளர்கள் ராமகிருஷ்ணன், கணபதியம்மாள், மாவட்ட பிரதிநிதிகள் அனீபா, அருணாசலம், இளைஞரணி வெங்கடேஷ், நிர்வாகிகள் ஷீனத் சாகுல்அமீது, இசக்கிமுத்து, கோமதிசங்கர், முத்தையா, வெள்ளையகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story