அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா? பெற்றோர்கள் எதிர்பார்ப்பு
புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா என மாணவிகளின் பெற்றோர்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகம் கொண்ட பள்ளிகளில் இதுவும் ஒன்று. இந்த மேல்நிலைப்பள்ளியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இவற்றில் பெரும்பாலான மாணவிகள் கிராமங்களில் இருந்து அரசு பஸ்சில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். ஆனால் இந்த பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு போதுமான எண்ணிக்கையில் கழிப்பறைகள் இல்லை. இதனால் மாணவிகள் இயற்கை உபாதைகளை கழிக்க கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதேபோல மாணவிகளுக்கு போதுமான வகுப்பறை வசதிகளும் இல்லை. இதனால் சில பாடவேளைகள் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தின் அடியில் நடைபெற்று வருகிறது. இதேபோல மாணவிகள் மதிய உணவு சாப்பிட்டு விட்டு கை கழுவுவதற்கு போதுமான வசதிகள் இல்லை. பள்ளி வளாகத்தில் ஒரு ஆழ்துளை கிணறு உள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றில் ஒரு மின்மோட்டாரை பொருத்தி, சிறிய குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளியில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் சிமெண்டு சாலை முற்றிலும் சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் சைக்கிளில் செல்லும் மாணவிகள் அவ்வப்போது விழுந்து காயமடைந்து வருகின்றனர். பள்ளியில் காவலாளிகள் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளதால், இரவில் பள்ளி வளாகத்தில் சமூக விரோதிகள் புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வதற்கு போதுமான துப்புரவு பணியாளர்கள் இல்லை. தமிழக அரசு மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இதுபோன்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் அடிப்படை வசதிகளை முறையாக ஏற்படுத்தி கொடுப்பதில்லை. எனவே இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, கூடுதல் கழிப்பறைகளை கட்டிக்கொடுக்கப்படுமா? என பெற்றோர் எதிர்பார்த்து உள்ளனர்.
மேலும் கூடுதல் வகுப்பறைகளையும் கட்டிக்கொடுக்க வேண்டும். இதேபோல காலியாக உள்ள காவலாளி மற்றும் துப்புரவு பணியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Tags :
Next Story