காருடன் தீயில் எரிந்து என்ஜினீயர் பலி இரும்பு தடுப்பில் மோதியதால் விபத்து
கொளத்தூர் ரெட்டேரி அருகே சாலையில் இருந்த இரும்பு தடுப்பில் மோதி தாறுமாறாக ஓடிய கார், நடைபாதையில் மோதி நின்றது. இதில் காருடன் சேர்ந்து தீயில் எரிந்து என்ஜினீயர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
செங்குன்றம்,
சென்னை வடபழனி குமரன் காலனி 6-வது தெருவைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 36). என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தட்சிணாமூர்த்தி நேற்று முன்தினம் தனது காரில் ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றார்.
அங்கு சாமி தரிசனம் முடிந்து மீண்டும் காரில் சென்னை திரும்பினார். நேற்று முன்தினம் நள்ளிரவு கொளத்தூர் ரெட்டேரி அருகே வந்து கொண்டிருந்தார்.
கொளத்தூர் அருகே தற்போது மேம்பால பணி நடைபெற்று வருவதால் பாடி-மாதவரம் 200 அடி சாலையில் மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்வதற்காக ஆங்காங்கே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.
காரில் வேகமாக வந்த தட்சிணாமூர்த்தி, சாலையின் நடுவில் இரும்பு தடுப்புகள் இருப்பதை அருகில் வந்தபோதுதான் கவனித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், காரை வேகமாக திருப்பினார். இதில் அவரது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் இருந்த இரும்பு தடுப்பில் மோதி தாறுமாறாக ஓடி, சாலையோரம் உள்ள நடைபாதையில் மோதி நின்றது.
அப்போது திடீரென காரின் முன்புறம் உள்ள என்ஜின் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. ஆனால் தட்சிணாமூர்த்தியால் காரில் இருந்து வெளியே வரமுடியவில்லை.
கார் தீப்பிடித்து எரிவதை கண்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தட்சிணாமூர்த்தியை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் காரின் கதவுகளை திறக்க முடியவில்லை.
அதற்குள் கார் முழுவதும் தீ பரவியது. தட்சிணாமூர்த்தி மீதும் தீப்பிடித்து எரிந்தது. அவர் வலியால் அலறி துடித்தார். இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அம்பத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காரில் எரிந்த தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது. தட்சிணாமூர்த்தியும் காருடன் சேர்ந்து தீயில் எரிந்து உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த வில்லிவாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகிலா மற்றும் போலீசார், பலியான தட்சிணாமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலியான தட்சிணாமூர்த்திக்கு திருமணமாகி சிந்து என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

Related Tags :
Next Story