மும்பையில் பெய்த திடீர் மழையின் போது மின்சாரம் தாக்கி 3 பேர் பலி சாக்கடையில் விழுந்த 2 சிறுவர்கள் மீட்பு
மும்பையில்நேற்று முன்தினம் இரவுபெய்த திடீர் மழையின் போது மின்சாரம் தாக்கிசிறுவர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
மும்பை,
மும்பையில்நேற்று முன்தினம் இரவுபெய்த திடீர் மழையின் போது மின்சாரம் தாக்கிசிறுவர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.மேலும் சாக்கடையில் விழுந்த 2 சிறுவர்கள் மீட்கப்பட் டனர்.
3 பேர் சாவு
மும்பை, நவிமும்பை மற்றும் தானேயில் கொளுத்தி எடுத்த கோடை வெயிலுக்கு இதமாக நேற்றுமுன்தினம் இரவு திடீர் மழை பெய்தது. மழையின் போது பலத்த காற்றும் வீசியது. மின்னலின் தாக்கமும் இருந்தது. மும்பையை குளிர்வித்த இந்த திடீர் மழைக்கு 3 பேர் பலியாகி விட்டனர்.
பாண்டுப் பகுதியின் வெவ்வேறு இடங்களை சேர்ந்த அனில் பாண்டுரங் யாதவ்(வயது32), சாரா யூனுஸ் சேக்(9), ஓம் அப்பா பாத்டாரே(10) ஆகிய 3 பேரும் மழையின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
நிலச்சரிவு
ரோஷன் சித்தார்(12) என்ற சிறுவன் மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளான். அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மழையின் போது, மும்பையில் பல்வேறு இடங்களில் 9 மரங்கள் விழுந்தன. செம்பூர் கிழக்கு பஞ்சரபோல் குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதிர்ஷ் டவசமாக இதில் யாரும் சிக்கவில்லை.
மால்வாணியில் மழை பெய்து கொண்டிருந்த போது, அங்குள்ள சாக்கடையில் ஓடிய தண்ணீருக்குள் 2 சிறுவர்கள் தவறி விழுந்து விட்டனர். இருவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
Related Tags :
Next Story