கண்களில் கருப்பு துணி கட்டி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல்,
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வேலுச்சாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி கலந்து கொண்டனர்.
சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் காலியாக உள்ள சத்துணவு ஊழியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கல்வி தகுதி அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story