ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் கிராமமக்கள் முற்றுகை


ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் கிராமமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 5 Jun 2018 3:00 AM IST (Updated: 5 Jun 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா காலங்களில் பொங்கல் வைப்பது, கலைநிகழ்ச்சிகள் நடத்துவது உள்ளிட்ட பொதுநிகழ்ச்சிக்கு அரசு நிலம் உள்ளது. இந்நிலையில் இந்த காலி நிலத்தில் ஒரு தரப்பினர் கடந்த மாதம் கலையரங்கம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கலையரங்கு கட்டும் பணி நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் கலையரங்கம் கட்டு பணி தொடர்ந்து நடைபெறுவதாக கூறி அதிகாரிகளிடம் அந்த தரப்பினர் மனு அளித்தனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கிராமமக்கள் 50–க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்துசென்றனர்.


Next Story