ரோபோக்களுக்கான செயற்கை நரம்புகள்
மனிதர்களுக்கு நிகரான பல திறன்களைக் கொண்ட ரோபோக்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், மனிதர்களைப் போன்ற தோடு உணர்வு கொண்ட ரோபோக்களை இதுவரை யாராலும் உருவாக்க முடியவில்லை.
மனிதர்கள் உள்ளிட்ட பல விலங்குகளுக்கு இருக்கும் தொடு உணர்வுகளுக்கு அடிப்படையாக விளங்குவது அவற்றின் உடலில் உள்ள நரம்புகள் தான்.
ரோபோக்களின் உடல் பகுதி பெரும்பாலும் உலோகங்களால் ஆனவையே. இருப்பினும் சமீப காலங்களில் மனிதர்களுக்கு நிகரான செயற்கை தோல் மற்றும் தசைகள் போன்ற அமைப்பில் ரோபோக்கள் தயாரிக்கப்படுகின்றன.
இருப்பினும், ரோபோக்களின் உடலில் நரம்புகளைப் பொருத்த முடியாத காரணத்தால், அவற்றின் தோலுக்கும், தசைகளுக்கும் தொடு உணர்வை ஏற்படுத்த முடியாமல் விஞ்ஞானிகள் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஈக்கோல் பாலிடெக்னிக் பெடரேல் டீ லாசேன் (Ecole Polytechnique Fdrale de Lausanne, EPFL) என்ற ஆய்வு நிறுவனத்தின் பொறியாளர்கள் ரோபோக்களின் நரம்பாகச் செயல்படக்கூடிய, பிளாஸ்டிக்கால் ஆன, மிகவும் மெலிதான கம்பிகளை உருவாக்கி அசத்தியுள்ளனர்.
முக்கியமாக, கம்பி முழுக்க மின்முனைகள் (electrodes) மற்றும் மின்கடத்திகளும் (Conductors) நிறைந்து இருக்கும். இதனால், தொடுதலுக்கு எதிர்வினையாக நிகழும், தொடு உணர்வுக்குக் காரணமான மின்சார அதிர்வுகளை கடத்த முடியும் என்கிறார்கள் துணை பேராசிரியர் பேபியன் சோரின் தலைமையிலான இதன் உற்பத்தியாளர்கள்.
அடிப்படையில், மின்முனைகள் நிறைந்த மிக மிக மெலிதான ஆப்டிக் கேபிள்தான் இந்த பிளாஸ்டிக் கம்பி. இதனை உருவாக்க, ஒரு அடர்த்தியான பிளாஸ்டிக் கட்டை முதலில் உருக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மெலிதான கம்பிகள் மெதுவாக இழுக்கப்பட்டன.
இதுபோன்ற முயற்சிகள் இதற்கு முன்பே மேற்கொள்ளப்பட்டாலும், அவற்றில் கிடைத்த கம்பிகள் இறுகி விட்டதால் அவை இலகுத்தன்மையை இழந்து பயனற்றுப் போய்விட்டன. ஆனால் இந்த புதிய பிளாஸ்டிக் கம்பி உற்பத்தியின்போது, பிளாஸ்டிக் உருகிய உடனேயே அதில் தேவையான இடங்களில் மின்முனைகள் பொருத்தப்பட்டு அதற்குப்பின்னர் கம்பிகள் இழுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய உற்பத்தி முறை காரணமாக, மிக மிருதுவான மற்றும் மெலிதான, மின்கடத்திகள் நிறைந்த, மிக முக்கியமாக அதீத இழுக்கும் திறன்கொண்ட ஒரு கம்பி உருவானது. இவை ரோபோக்களின் உடலில் பொருத்தப்பட்டால், அதன் மூட்டுகள் வளைந்து நிமிரும்போது இந்த பிளாஸ்டிக் கம்பிகள் உறுதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றின் செயல்பாட்டுக்கும் உறுதுணையாக இருக்கும் என்கிறார் சோரின்.
இதற்கு முன்னர், ரோபாட்டுகளின் தொடு உணர்வுக்காக உருவாக்கப்பட்ட கருவிகள் மிகவும் பெரிதாக இருந்தன. அவற்றின் இயக்கத்துக்கு திரவத்தேக்கிகள் (fluid reservoirs) அவசியமாக இருந்தன. அதனால் அவற்றை ரோபாட்டுகளில் பயன்படுத்த முடியவில்லை.
ஆனால், மின்கடத்திகள் நிறைந்த, மிகவும் மெலிதான இந்த புதிய பிளாஸ்டிக் கம்பிகள் ரோபோக்களின் நரம்புகளாகச் செயல்பட மிகவும் பொருத்தமாக இருக்கும். மேலும், அவற்றுக்குத் தொடு உணர்வை ஏற்படுத்த கண்டிப்பாக உதவும் என்று கூறுகிறார் சோரின்.
ரோபோக்களின் தொடு உணர்வு மட்டுமல்லாமல், பல்வேறு நவீன வசதிகள் கொண்ட ஸ்மார்ட் உடைகளைத் தயாரிக்கவும் இந்த பிளாஸ்டிக் கம்பிகளை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்கிறார் துணைப் பேராசிரியர் சோரின்.
- தொகுப்பு: ஹரிநாராயணன்

Related Tags :
Next Story