மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு
மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் ஓரிக்கை ராஜநகரை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 70). இவர் காஞ்சீபுரம் காமராஜர் சாலையை கடந்தார். அப்போது, ஒரு மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த முனிம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை ராஜபாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் சுனில்குமார் (19). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுனில்குமார் தனது மோட்டார் சைக்கிளில் செங்குன்றம் சென்று விட்டு மீண்டும் தன்னுடைய வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். திருவள்ளூரை அடுத்த ஈக்காடு சாலையில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே திடீரென மாடு ஒன்று வந்து விட்டது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் பிடித்தபோது சுனில்குமார் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுனில்குமார் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story