‘சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருந்தால்தான் மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியும்’
‘சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருந்தால்தான் மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியும்’ என்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறையின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு நிகழ்வு நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பா ஸ்கரன் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
ஒரு சமுதாயம் இருக்கிறது என்று சொன்னால் அது சுற்றுப்புற பாதுகாப்பில்தான் இருக்கும். இன்று காற்றிலே மாசு, நீரிலே மாசு என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம். மனிதனுக்கு எவை முக்கியமோ அவை இரண்டும் மாசுபட்டு இருக்கின்ற நிலையை பார்க்கிறோம். இந்த மாசுகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என்றால் அதைப்பற்றி நாம் முழுமையாக அறிந்து இருக்க வேண்டும். அது குறித்த விழிப்புணர்வை நாம் பெற்று இருக்க வேண்டும்.
இன்று நீரிலே மாசு என்பது மிக சாதாரணமாக மாறி விட்டது. இதனால் நீரே கிடைக்காத நிலை வந்து கொண்டு இருக்கிறது. இன்னும் 50 ஆண்டுகளில் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கும் என்று செய்திகள் வருகின்றபோது அதற்காக நாம் வருத்தப்பட்டோ, அதிர்ச்சி அடைந்தோ இருந்தால் வாழ முடியாது.
அதற்கு என்ன தீர்வு, அதை எப்படி செய்ய வேண்டும் என்று நாம் பார்க்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருந்தால்தான் நாம்(மனிதர்கள்) நிம்மதியாக வாழ முடியும். சுற்றுச்சூழல் என்பது வாழ்க்கைக்கு தேவையான ஒரு அடிப்படையான ஒன்றாக இருக்கிறது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக சுற்றுச்சூழலியல் துறை தலைவர் கண்ணன் சிறப்புரை ஆற்றினார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் முத்துக்குமார் வாழ்த்துரை வழங்கினார். மூலிகை அறிவியல் துறை தலைவர் சிவசுப்பிரமணியன் அறிமுக உரையாற்றினார்.
முன்னதாக உதவி பேராசிரியர் கவிதா வரவேற்று பேசினார். முடிவில் உதவி பேராசிரியர் ராகேஷ் சர்மா நன்றி கூறினார்.

Related Tags :
Next Story