நெல்லை அரசு பொருட்காட்சியில் அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கியது
நெல்லையில் நடைபெற உள்ள அரசு பொருட்காட்சியில் அரசின் சாதனை விளக்க அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கியது.
நெல்லை,
நெல்லையில் நடைபெற உள்ள அரசு பொருட்காட்சியில் அரசின் சாதனை விளக்க அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கியது.
அரசு பொருட்காட்சி
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசு பொருட்காட்சி நடத்தப்படும். அதில் அரசின் சாதனைகளை பற்றியும், அரசின் நலத்திட்டங்களை எப்படி பெறுவது என்பது பற்றிய விளக்கமும் இடம்பெறும்.
இந்த ஆண்டுக்கான அரசு பொருட்காட்சி நெல்லை டவுனில் உள்ள மாநகராட்சி திடலில் இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கப்படுகிறது. அதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அரங்குகள் அமைக்கும் பணி
பொருட்காட்சி திடலில் அரங்குகள் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கியது. பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வனத்துறை, வேளாண்மை துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, கூட்டுறவு துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை, தோட்டக்கலை துறை, பொதுப்பணித்துறை, இந்து சமய அறநிலையத் துறை, பள்ளிக்கல்வித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்பட 27 அரசு துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்படுகின்றன
ஆவின், தாட்கோ, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு எரிசக்தி முகமை உள்ளிட்ட சார்பு நிறுவனங்கள் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
Related Tags :
Next Story