சட்ட மேலவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு சுகாதாரத்துறை மந்திரி தீபக் சாவந்த் ராஜினாமா

சட்ட மேலவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு சுகாதாரத்துறை மந்திரி தீபக் சாவந்த் ராஜினாமா
x
தினத்தந்தி 6 Jun 2018 4:15 AM IST (Updated: 6 Jun 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

சிவசேனா சார்பில் சட்ட மேலவை ேதர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை மந்திரி தீபக் சாவந்த் திடீரென தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

மும்பை,

சிவசேனா சார்பில் சட்ட மேலவை ேதர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை மந்திரி தீபக் சாவந்த் திடீரென தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

வாய்ப்பு மறுப்பு

மராட்டியத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசில் சிவசேனாவின் தீபக் சாவந்த் சுகாதாரத்துறை மந்திரியாக உள்ளார். அவர் சட்ட மேலவை உறுப்பினராகவும் இருக்கிறார். மும்பை பட்டதாரிகள் தொகுதியில் இருந்து அவர் எம்.எல்.சி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவரது எம்.எல்.சி. பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து, சட்ட மேலவையின் மும்பை பட்டதாரிகள் தொகுதிக்கான தேர்தல் வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் தீபக் சாவந்த் மீண்டும் போட்டியிட சிவசேனா சார்பில் வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.

தீபக் சாவந்த் ராஜினாமா

அவருக்கு பதிலாக அக்கட்சியின் விலாஸ் போட்னிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில், நேற்றுமுன்தினம் மாலை திடீரென தீபக் சாவந்த் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். பின்னர் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசையும் அவர் சந்தித்தார். ஆனால் அவரிடம் எந்த கடிதத்தையும் கொடுக்கவில்லை. கடந்த வாரம் உத்தவ் தாக்கரே தீபக் சாவந்தை அழைத்து மந்திரி பதவியை ராஜினாமா செய்யும் படி கூறியதாக சிவசேனா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story