ஒரு குவிண்டால் துவரம் பருப்புக்கு ரூ.1,000 வழங்க முதல்-மந்திரி பட்னாவிஸ் உத்தரவு


ஒரு குவிண்டால் துவரம் பருப்புக்கு ரூ.1,000 வழங்க முதல்-மந்திரி பட்னாவிஸ் உத்தரவு
x
தினத்தந்தி 6 Jun 2018 4:30 AM IST (Updated: 6 Jun 2018 3:58 AM IST)
t-max-icont-min-icon

மந்திரி சபை கூட்டத்தை தொடர்ந்து ஒரு குவிண்டால் துவரம் பருப்புக்கு ரூ.1000 வழங்க முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.

மும்பை, 

மந்திரி சபை கூட்டத்தை தொடர்ந்து ஒரு குவிண்டால் துவரம் பருப்புக்கு ரூ.1000 வழங்க முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.

துவரம்பருப்பு விலை வீழ்ச்சி

மராட்டியத்தில் துவரம் பருப்பு விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அரசு சார்பில் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய முடிவானது. இதைத்தொடர்ந்து 44 லட்சத்து 60 ஆயிரம் குவிண்டால் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்ட்டது.

இதையடுத்து கடந்த மாதம் 31-ந் தேதி வரை விவசாயிகளிடம் இருந்து துவரம் பருப்பை அரசு கொள்முதல் செய்தது. இதற்கிடையே மாநிலத்தில் விவசாயிகள் பலரிடம் அரசு முறையாக துவரம் பருப்பை கொள்முதல் செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

குவிண்டாலுக்கு ரூ.1000

இந்தநிலையில் வாராந்திர மந்திரி சபை கூட்டத்தை தொடர்ந்து மும்பையில் நிருபர்களை சந்தித்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ‘ விவசாயிகள் குறித்து அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. கடந்த மாதம் 31-ந் தேதி வரையிலான துவரம் பருப்பு கொள்முதலில் விடுபட்ட விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் துவரம் பருப்புக்கு ரூ.1000 வழங்க உத்தரவிட்டு இருக்கிறோம் ’ என தெரிவித்தார்.

இதுதவிர இயற்கை சீற்றத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ரூ.160 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், பால் உற்பத்தியாளர்களுக்கு சிறப்பு மானியங்கள் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story