பழனியில் ரவுடி வெட்டிக்கொலை: அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது
பழனியில் பட்டப்பகலில் ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பழனி,
திண்டுக்கல் மாவட்டம் பழனி பாரதி நகரை சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மனைவி சாவித்ரி. இவர்களுக்கு செந்தில்குமார் (வயது 38), பாரதிமோகன் என்ற 2 மகன்கள் இருந்தனர். இதில் பாரதிமோகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். பழனியில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது அடிவாரம் பகுதியில் ஆட்டோ டிரைவர்கள் உதயகுமார், பாலாஜி ஆகியோரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தது.
இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவராக செந்தில்குமாரும் இருந்துள்ளார். மேலும் செந்தில்குமார் தனது தம்பி பாரதிமோகனுடன் திருப்பூரில் இருந்த போது நடந்த ஒரு கொலை வழக்கில் செந்தில்குமார் மீது திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து ஆந்திர மாநிலத்துக்கு தப்பி சென்ற செந்தில்குமார், அங்கு திவ்யா (34) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கருப்பண பாரதி (4) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் பிரபல ரவுடியாக மாறிய செந்தில்குமார் தனது குடும்பத்தினருடன் பழனிக்கு வந்துள்ளார். அவரை வெளியூருக்கு சென்று குடும்பம் நடத்துமாறு அவருடைய தாயார் கூறியுள்ளார்.
அதையடுத்து செந்தில்குமார் தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல்லுக்கு வந்து குடியேறினார். இந்த நிலையில் நேற்று தனது மகனுடன் தாயார் சாவித்ரியை பார்ப்பதற்காக செந்தில்குமார் பழனிக்கு வந்தார். பின்னர் மகனை தாயார் வீட்டில் விட்டுவிட்டு, கடைக்கு சென்று வருவதாக கூறி அவர் புறப்பட்டார். அதன் பின்னர் காலை 10.30 மணியளவில் பழனி அடிவாரம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மதுபானக்கூடம் முன்பு 3 பேருடன் சேர்ந்து செந்தில்குமார் வந்துள்ளார். அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த 3 பேர் தாங்கள் வைத்திருந்த பட்டா கத்திகளால் சரமாரியாக செந்தில்குமாரை வெட்டினர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தவித்த செந்தில்குமார் தப்பி ஓட முயன்றும் முடியவில்லை. அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் விழுந்தது. சில நிமிடங்களில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துபோனார். ஒருவரை 3 பேர் கும்பல் வெட்டி சாய்த்த சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.
இதற்கிடையே அவரை கொலை செய்துவிட்டு அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். பரபரப்பாக நடந்த இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த பழனி நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், 3 பேர் கொண்ட கும்பல் செந்தில்குமாரை பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அடிவாரம் பகுதிக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. உடனே அடிவாரம் பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் ரத்த கரை படிந்த சட்டையுடன் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் அடிவாரம் பகுதியை சேர்ந்த கோபிநாத்துர்க்கா, சவுந்திரபாண்டியன் என்பது தெரியவந்தது. இதில் செந்தில் குமாரை 3 பேர் வெட்டும்போது கோபிநாத்துர்க்காவுக்கும் உடலில் சில இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டு இருந்ததும் தெரிந்தது.
கோபிநாத்துர்க்கா, அவருடைய தம்பி பூபாலன், சவுந்திரபாண்டியன் ஆகியோர் சேர்ந்து செந்தில்குமாரை வெட்டி கொலை செய்ததும் உறுதி செய்யப்பட்டது. கோபிநாத்துர்க்காவுக்கு உடலில் வெட்டு காயங்கள் இருந்ததால் அவரை பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்திரபாண்டியன், கோபிநாத்துர்க்கா ஆகிய 2 பேரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெளியூருக்கு தப்பிச்செல்வதற்காக பழனி பஸ் நிலையத்துக்கு வந்த பூபாலனையும் போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story