வேலூரில் அஞ்சல் ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம் தபால்கள் தேக்கம்
வேலூர் தலைமை தபால் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்,
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டுப் போராட்டக்குழு சார்பில் வேலூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் பணியாற்றும் எழுத்தர்கள், தபால்காரர்கள், கிராமிய அஞ்சல் ஊழியர்கள், 4-ம் பிரிவு ஊழியர்கள் வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே கடந்த மாதம் 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மொட்டை அடித்து, நாமம் போடும் போராட்டம், அரை நிர்வாண போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 16-வது நாளான நேற்று அஞ்சல் ஊழியர்கள் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் முனிரத்தினம் முன்னிலை வகித்தார். பொருளாளர் செல்வகுமார் வரவேற்றார்.
அதைத் தொடர்ந்து அவர்கள், கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தொழிற்சங்க உறுப்பினர் சரிபார்ப்பு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தில், தேசிய அஞ்சல் ஊழியர்கள் சங்க தலைவர் திருவேங்கடம், செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் 73 சதவீத கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட கிளை அஞ்சலகங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால், பதிவு தபால் சேவை, சேமிப்பு கணக்கு உள்பட அனைத்து தபால் சேவைகளும் முடங்கி உள்ளன. வேலூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான தபால்கள் தேங்கி உள்ளது’ என்றனர்.

Related Tags :
Next Story