பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்: நாளை மறுநாள் நடக்கிறது


பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்: நாளை மறுநாள் நடக்கிறது
x
தினத்தந்தி 7 Jun 2018 4:15 AM IST (Updated: 7 Jun 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை மறுநாள் நடக்கிறது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

நெல்லை, 

நெல்லை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம் ஒவ்வொரு மாதமும் தாலுகா அளவில் ஒவ்வொரு கிராமத்திலும் 2-வது சனிக்கிழமையன்று பொது வினியோக திட்டம் தொடர்பான குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம், குடிமை பொருள் வழங்கல் தாசில்தார் தலைமையில் நடைபெறும்.

இந்த மாதத்தின் 2-வது சனிக்கிழமையான நாளை மறுநாள் (9-ந் தேதி) இந்த முகாம் நடக்கிறது. நெல்லை தாலுகா பழைய பேட்டையிலும், பாளையங்கோட்டை தாலுகா பர்கிட்மாநகரத்திலும், சங்கரன்கோவில் தாலுகா ஜமீன்இலந்தைகுளம் கிராமத்திலும், தென்காசி தாலுகா இலஞ்சி தென்றல்நகரிலும், செங்கோட்டை தாலுகா தவணை கிராமத்திலும் முகாம் நடக்கிறது.

சிவகிரி தாலுகாவுக்கு உட்பட்ட வடுகப்பட்டி கிராமத்திலும், வீரகேரளம்புதூர் தாலுகா கங்கணாகிணறு கிராமத்திலும், ஆலங்குளம் தாலுகா அத்தியூத்து கிராமத்திலும், அம்பை தாலுகா கோடாரக்குளம் கிராமத்திலும், நாங்குநேரி தாலுகா களக்காட்டிலும், ராதாபுரம் தாலுகா சமூகரெங்கபுரத்திலும், கடையநல்லூர் தாலுகா நகரம் கிராமத்திலும், திருவேங்கடம் தாலுகா சத்ரன்கொண்டான் கிராமத்திலும், மானூர் தாலுகா வெங்கலபொட்டல் கிராமத்திலும், சேரன்மாதேவி தாலுகா பாப்பாக்குடியிலும் இந்த முகாம் நடக்கிறது.

இந்த குறைதீர்க்கும் முகாமில் அந்தந்த கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய ரேஷன் கார்டு, ரேஷன் கடையில் வழங்கும் பொருட்கள் குறித்த குறைகள் இருந்தால் புகார் தெரிவித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story