ஈரோட்டில் 2 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் 2 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஈரோடு,
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து, ஈரோடு மாநகர், மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி புவனேஸ்வரி தலைமை தாங்கினார். மகளிர் அணி நிர்வாகிகள் கோமதி, அங்காள பரமேஸ்வரி, பிரேமா, ரஞ்சிதம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், துணைத்தலைவர்கள் ராஜேஸ்ராஜப்பா, விஜய்கண்ணா, பாபுவெங்கடாசலம், மண்டல தலைவர் ஜாபர்சாதிக், சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் பாட்ஷா, முகமது அர்ஷத் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
இதேபோல் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மூலப்பாளையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிசாமி தலைமை தாங்கினார்.
தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் ஆர்ப்பாட்ட இடத்தில் கியாஸ் சிலிண்டர்களை வைத்து அதற்கு மாலை அணிவித்து இருந்தனர். இதில் வட்டார தலைவர்கள் முத்துக்குமார், நடராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணி, மாரியப்பன், மகிளா காங்கிரஸ் தலைவி சகுந்தலா உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story